Tuesday, August 2, 2016

Sivagami Ammaiyar Memorial Girl Child Protection Scheme


முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்:-


நோக்கம்:- பெண் கல்வியை மேம்படுத்துதல், பெண் சிசுக் கொலையை ஒழித்தல், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கினைத் தடுத்தல், சிறு குடும்ப முறையை ஊக்குவித்தல், ஏழைக் குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தல் மற்றும் சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் நிலையை உயர்த்துதல்.

வழங்கப்படும் உதவி:-

திட்டம்-1: ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால்.
(i) 01-08-2011-க்கு முன்பு பிறந்த குழந்தை எனில் ரூ.22,200/-
(ii)01-08-2011-க்கு பின்பு பிறந்த குழந்தை எனில் ரூ.50,000/- வைப்புத் தொகையாக தாய்மார்களின் பெயரில் வழங்கப்படுகிறது.

திட்டம்-2: இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தால்.
(i) 01-08-2011-க்கு முன்பு பிறந்த குழந்தைகள் எனில் தலா ரூ. 15,200/-
(ii) 01-08-2011-க்கு பின்பு பிறந்த குழந்தைகள் எனில் தலா ரூ.25,000/- வைப்புத் தொகையாக தாய்மார்களின் பெயரில் வழங்கப்படுகிறது.

பயன்பெறுபவர்:- வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண் குழந்தைகள்.
வழங்கப்படுவதற்கான கால அளவு:- நிலை வைப்புத் தொகையின் 18-ம் ஆண்டின் முடிவில் மீதமுள்ள திரண்ட வட்டியுடன் முதிர்வுத் தொகை சேர்த்து வழங்கப்படும்.

பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்:-

1)      இரண்டு பெண்குழந்தைகளின் பெயருடன் கூடிய பிறப்பு சான்று (சென்னை மாநகராட்சியிடம் இருந்து) இரண்டாவது பெண் குழந்தை பிறந்த மூன்று வயதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

2) தாய், தந்தையின் பள்ளி மாற்றுச்சான்று நகல் அல்லது அரசு மருத்துவரிடம் பெற்ற வயது சான்று (அசல்)

3)  குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சான்று (தாய், தந்தை 35 வயதிற்குள் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்க வேண்டும்) (அசல்)

4)      குடும்ப வருமானச்சான்று ரூ. 72,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.(அசல்)

5)      கணவன், மனைவியின் பெயர் குறிப்பிட்டுள்ள குடும்ப அட்டை நகல்.

6)      தாய், தந்தை இருவரின் சாதிசான்று நகல்

7) ஆண் குழந்தைகள் இல்லை, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது எனச்சான்று (வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்டது) அசல்.

8)      பிறப்பிடச்சான்று

9)  குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது வழங்கப்பட்ட டிஸ்சார்ஜ் சம்மரி நகல் 

10)   குடும்ப புகைப்படம்.

No comments:

Post a Comment

PROBATE

Ø   Every person of sound mind not being a minor may dispose of his property by way of WILL. Any such WILL left by the testator shall...