தமிழக அரசு ஏழை, எளிய
மக்களுக்கும், சமுதாயத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை
செயல்படுத்தி வருகிறது. இதில் சமூக நலத்துறையின் மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம்
செயல்படுத்தும் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண
நிதிஉதவித் திட்டம்:-
நோக்கம்:- வறுமைக்கோட்டிற்கு
கீழ்வாழும் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி
வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.
வழங்கப்படும் நிதிஉதவி:-
திட்டம்-1: ரூ.25,000/- (காசோலை) (ம)
திருமாங்கல்யம் செய்வதற்காக நான்கு கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.
திட்டம்- 2: ரூ.50,000/- (காசோலை) (ம)
திருமாங்கல்யம் செய்வதற்காக நான்கு கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.
பயன்பெறுபவர்:-
ஏழைப் பெண்களின் தாய் அல்லது
தந்தை பெயரில் வழங்கலாம். பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம்.
தகுதிகள்:-
1. கல்வித்தகுதி:-
திட்டம்-1
(i) திருமணத்தன்று மணப்பெண் பத்தாம்வகுப்பு வரை பள்ளியில் படித்து முடித்திருக்க
வேண்டும். (தேர்ச்சி அல்லது தோல்வி)
(ii) தனியார் / தொலைதூரக் கல்வி மூலம்
படித்து இருந்தால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.
(iii)பழங்குடியினராக இருந்தால்
ஐந்தாம் வகுப்பு வரை படித்திருத்தல் வேண்டும்.
திட்டம்- 2
(i) பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால்
அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல்
வேண்டும்.
(ii) பட்டயப் படிப்பு (Diploma) எனில் தமிழக அரசின்
தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து
தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
2. திருமணத்திற்கு நாற்பது நாட்களுக்கு முன்
விண்ணப்பிக்க வேண்டும்.
3. திருமணத்தன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க
வேண்டும். (உச்ச வயது வரம்பு இல்லை)
4. ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும்
உதவித்தொகை வழங்கப்படும்.
5. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல்
இருத்தல் வேண்டும்.
இணைக்கப்படவேண்டிய
சான்றுகள்:-
1) வட்டாட்சியரிடமிருந்து
பெறப்பட்ட வருமான சான்று (நகல்)
2)
மணப்பெண்ணின் கல்வி தகுதிக்கான சான்று (நகல்)
3) மணப்பெண்ணின்
வயதிற்கான சான்று (நகல்)
4) திருமண
அழைப்பிதழ் மற்றும் புகைப்படம்
அணுகவேண்டிய அலுவலர் /
அலுவலகம்:-
மாவட்ட
சமூகநல அலுவலர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், சம்பந்தப்பட்ட மாநகராட்சி
மண்டல அலுவலர், சென்னை.
No comments:
Post a Comment