Monday, September 26, 2016

சென்னை மாவட்ட நிலங்களின் வகைப்பாடும், பதிவும்:-



சென்னை மாநகரில் நிலங்கள் பொதுவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் முக்கிய தலைப்புகள் பின்வருமாறு:-

1. 1851-ன் தமிழ்நாட்டு சட்டம் 12-ன் கீழ் விதிக்கப்பட்ட மாற்றமுடியாத
ஒரு விடுவரியின் (quit rent) கீழ் சொந்தமான நிலங்கள்.

2. G.O.Ms.No.758 Revenue dated 10.03.1914-ன் கீழ் விதிக்கப்பட்ட
மனைத்தீர்வை (ground rent) செலுத்தி வரும் நிலங்கள்.

3. அரசுக்குச் சொந்தமான தனி நபர்களுக்கோ / மாநகராட்சிகோ வழங்கப்பட்ட
தற்காலிக குத்தகையின் கீழ் உள்ள குத்தகைத் தீர்வை செலுத்து நிலங்கள்.

4. G.O.Ms.No.51 Revenue dated 04.01.1918-ன் கீழ் 25 ஆண்டுகளுக்கான
தீர்வையினைச் செலுத்தி, வரி வருவாய்-னை பூர்த்தி செய்து விட்ட நிலங்களும், நிரந்தர வரியில்லாச் சான்றின் கீழ் உரிமை பெற்ற நிலங்கள்.

5. அறம், சமயம் மற்றும் இதர காரியங்களுக்காக கட்டு வரம்புள்ள
விதிவிலக்குகளின் கீழ் உள்ள முன்னால் ஆற்காட்டு நவாப்பின் குடும்பத்தார் பயன்படுத்தி வரும் (அ) அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட, நிலவரி விதிப்புக்கு விலக்கு, நிலக்கிழார் உரிமையுள்ள, சில நிலக்கிழார்களின் நேரடியான வழி முறையினரின் பயன்பாட்டில் உள்ள நிலங்கள்.

6. "மாநகராட்சி-பொது" (Corporation Public) என்று பதிவு செய்யப்பட்ட
சாலைகள், சாக்கடை முதலிய நிர்வாக காரியத்திற்காக நகராட்சிக்கு சட்ட உரிமை அளிக்கப்பட்ட அரசு நிலம் - தனியார் தெருக்கள்.

7. வாங்கப்பட்ட அல்லது தனிப்பட்ட சொந்தக்காரரால் மாநகராட்சிக்கு
ஒப்படைக்கப்பட்ட அல்லது தன் பொறுப்பில் இருக்கும் பணத்தைக் கொண்டு நிலஎடுப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு "மாநகராட்சி - சொந்தம்" என்று பதிவு செய்யப்பட்ட நிலம்.

8. இரும்புப் பாதைத்துறை, துறைமுக நம்பகம் (Fort Trust) முதலியவைகளுக்கு
மாற்றப்பட்ட நிலங்கள்.

9. பல்வேறு அரசுத் துறையின் பொறுப்பில் உள்ள நிலங்கள்.

Sunday, September 11, 2016

Annai Sathya Ammaiyar Ninaivu Goverment Orphanage

அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம்:-

நோக்கம்:- இலவச உணவு, உடை, உறைவிடம் மற்றும் மருத்துவ உதவி அளிப்பதன் மூலம் ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி அளித்தல்.

வழங்கப்படும் நிதிஉதவி:- உணவு, உறைவிடம், கல்வி, சீருடை, இலவச பாடநூல்கள், உயர்கல்வி படிக்க நிதிஉதவி மற்றும் நோட்டுபுத்தகங்கள், மருத்துவ வசதி, காலணிகள் மற்றும் படுக்கை வசதி அளித்தல்.

பயன்பெறுபவர்:-

ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் இல்லாத அல்லது தாயோ, தந்தையோ மட்டுமே உள்ள குழந்தைகள், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோரால் பராமரிக்க முடியாத குழந்தைகள் மற்றும் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் பெற்றோர், இருவரும் உயிருடன் இருந்தும் தந்தை / தாய் கடம் மாற்றுத்திரனுடையோரக இருந்து தாய் / தந்தையால் கவனிக்கப்படும் நிலையிலுள்ள குடும்பங்களின் குழந்தைகள்.

தகுதிகள்:-
1) கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை.
2) ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3) 5 வயது முதல் 18 வயது வரையிலான பெண் குழந்தைகள் தங்கி பயில அனுமதிக்கப்படுகிறார்கள்.
4) 5 வயது முதல் 10 வயது வரையிலான ஆண் குழந்தைகள் தங்கி பயில அனுமதிக்கப்படுகிறார்கள்.
5) கல்வி ஆண்டு தொடங்கும் முன் விண்ணப்பிக்க வேண்டும்.
6) பெண் குழந்தைகள் மேல் படிப்புக்காக 21 வயது வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.

இணைக்கப்படவேண்டிய சான்றுகள்:-
1) கல்வி சான்று (நகல்)
2) வருமான சான்று (நகல்)
3) இருப்பிடச் சான்று (நகல்)
4) ஆதரவற்றவர் என்பதற்கான சான்று

அணுகவேண்டிய அலுவலர்:- மாவட்ட சமூகநல அலுவலர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர், அரசு குழந்தைகள் காப்பகம். http://socialdefence.tn.nic.in/

Saturday, September 10, 2016

Dr. Muthulakshmi Reddy Memorial Inter-Caste Marriage Assistance Scheme

தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கும், சமுதாயத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் சமூக நலத்துறையின் மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் செயல்படுத்தும் திட்டம் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்:-




நோக்கம்:- சமுதாய வேறுபாடு நிலையில் பிறப்பு அடிப்படையிலான சாதி, இன வேறுபாட்டை அகற்றி, தீண்டாமை எனும் கொடுமையை ஒழித்தல்.

வழங்கப்படும் நிதிஉதவி:-
திட்டம்-1: ரூ.25,000/- வழங்கப்படுகிறது (இதில் ரூ.15,000/- காசோலையாகவும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக நான்கு கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.

திட்டம்-2: ரூ.50,000/- வழங்கப்படுகிறது (இதில் ரூ.30,000/- காசோலையாகவும், ரூ. 20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக நான்கு கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.

பயன்பெறுபவர்:- கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியருக்கு வழங்கப்படுகிறது.

தகுதிகள்:-

பிரிவு-1:- தம்பதியரில் எவரேனும் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்து பிற இனத்தவரை மணந்து கொண்டால் நிதியுதவி வழங்கப்படும்.

பிரிவு-2:- புதுமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட (இதர) வகுப்பினராகவும், மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் நிதியுதவி வழங்கப்படும்.

1. கல்வித்தகுதி:-
திட்டம்-1: கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை.
திட்டம்- 2
      (i) பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
      (ii) பட்டயப் படிப்பு (Diploma) எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

இணைக்கப்படவேண்டிய சான்றுகள்:-
      1) திருமண அழைப்பிதழ் மற்றும் திருமண புகைப்படம்
      2) வயதிற்கான சான்று (நகல்)
      3) தம்பதியரின் சாதி சான்று மற்றும் இருப்பிட சான்று (நகல்)

அணுகவேண்டிய அலுவலர்:-

      மாவட்ட சமூகநல அலுவலர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்

Annai Teresa Ninaivu Orphan Girls Marriage Assistance Scheme

தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கும், சமுதாயத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் சமூக நலத்துறையின் மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் செயல்படுத்தும் திட்டம் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதிஉதவித் திட்டம்:-




நோக்கம்:- பெற்றோர் இருவரையும் இழந்த ஆதரவற்ற பெண்ணுக்கு உதவி செய்வது.






வழங்கப்படும் நிதிஉதவி:-
திட்டம்-1: ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக நான்கு கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.
திட்டம்-2: ரூ.50,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக நான்கு கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.

பயன்பெறுபவர்:- தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்கள்.

தகுதிகள்:-

1. கல்வித்தகுதி:-
திட்டம்-1: கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை.

திட்டம்- 2
      (i) பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
      (ii) பட்டயப் படிப்பு (Diploma) எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

2. திருமணத்தன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். (உச்ச வயது வரம்பு இல்லை)

3. திருமணத்திற்கு நாற்பது நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைக்கப்படவேண்டிய சான்றுகள்:-
      1) தாய், தந்தை இறப்பு சான்று (அ)ஆதரவற்ற பெண் என்ற சான்று
      2) வருமான சான்று
      3) மணப்பெண்ணின் வயதிற்கான சான்று
      4) திருமண அழைப்பிதழ்

அணுகவேண்டிய அலுவலர்:-
      மாவட்ட சமூகநல அலுவலர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்

E.V.R Maniyammaiyar Memorial Widow Daughter’s Marriage Assistance Scheme

தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கும், சமுதாயத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் சமூக நலத்துறையின் மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் செயல்படுத்தும் திட்டம் ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித்திட்டம்:-

நோக்கம்:- ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால், அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு உதவி வழங்குதல்.

வழங்கப்படும் நிதிஉதவி:-

திட்டம்-1: ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக நான்கு கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.
திட்டம்-2: ரூ.50,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக நான்கு கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.

பயன்பெறுபவர்:-
      மணப்பெண்ணின் விதவைத் தாயிடம் வழங்கப்படும், விண்ணப்பித்த விதவைத் தாய் இறந்துவிடும் நேரவில், மணமகள் பெயரில் வழங்கலாம்.

தகுதிகள் (மணப்பெண்):-

1. கல்வித்தகுதி:-
திட்டம்-1: கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை.

திட்டம்- 2
      (i) பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
      (ii) பட்டயப் படிப்பு (Diploma) எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

3. திருமணத்தன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். (உச்ச வயது வரம்பு இல்லை).

4. விதவைத் தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.

5. திருமணத்திற்கு நாற்பது நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைக்கப்படவேண்டிய சான்றுகள்:-
      1) கணவரின் இறப்பு சான்று (அ) விதவை சான்று (நகல்)
      2) வருமான சான்று (அசல்)
      3) மணப்பெண்ணின் வயதிற்கான சான்று (நகல்)
      4) திருமண அழைப்பிதழ் மற்றும் புகைப்படம்

அணுகவேண்டிய அலுவலர்:-

      மாவட்ட சமூகநல அலுவலர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்

PROBATE

Ø   Every person of sound mind not being a minor may dispose of his property by way of WILL. Any such WILL left by the testator shall...